Guest players who played for various teams in IPL cricket
Guest players who played for various teams in IPL cricket

ஐபிஎல் தொடரில் அதிக தடவை அணிகள் மாறியதில் டாப் வீரர்கள்!

Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் அதிகம் முறை அணிகள் மாறி விளையாடிய வீரர்கள் குறித்து பார்ப்போம். இந்த வீரர்களின் திறனை நம்பி ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்தன.

ஆஸி. வீரர் ஆரோன் ஃபின்ச் ஐபிஎல் தொடரில் 9 ஃப்ரான்சைஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். பல ஐபிஎல் அணிகளில் விளையாடிய வீரர்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

டெல்லி, குஜராத் லயன்ஸ், பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, புனே வாரியர்ஸ், ராஜஸ்தான், ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளார் ஆரோன் ஃபின்ச்.

இந்திய வீரர் உனத்கட் 8 அணிகளுக்காக விளையாடி உள்ளார். டெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, ராஜஸ்தான், ரைசிங் புனே, ஆர்சிபி, ஹைதராபாத் அணிகளுக்கு விளையாடி உள்ளார்.

இந்திய வீரர் மணிஷ் பாண்டே 7 அணிகளுக்கு விளையாடியவர். டெல்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே வாரியர்ஸ், ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 6 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக ஆர்சிபி அணிக்காக விளையாடினார். 

தினேஷ் கார்த்திக்கை போலவே உத்தப்பா, யுவராஜ் சிங், பார்த்திவ் படேல், ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோரும் 6 ஐபிஎல் அணிகளில் விளையாடி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in