10 IPL Team Players From Nehra to Ponting
10 IPL Team Players From Nehra to Ponting

10 ஐபிஎல் அணிகளின் வாத்தியார்கள்: நெஹ்ரா முதல் பாண்டிங் வரை!

Updated on
3 min read

10 ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் யார் என்ற விவரத்தை பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட் அணிகளோடு ஒப்பிடும் போது ஐபிஎல் மாதிரியான ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளர்கள் பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஷிஷ் நெஹ்ரா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2022 முதல் செயல்பட்டு வருகிறார். அந்த அணிக்கு முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். ஆட்டத்தின் போது பவுண்டரி லைனில் நின்று கொண்டு தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார். 
 

டேனியல் வெட்டோரி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அதிரடி பாணி ஆட்டத்தை அந்த அணி விளையாடி வருகிறது. 

முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆன்ட்டி பிளவர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர், பஞ்சாப் அணியின் துணை பயிற்சியாளராக அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பணியாற்றி உள்ளார். 
 

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹிலா ஜெயவர்த்தனே செயல்பட்டு வருகிறார். 2017, 2019 மற்றும் 2020 சீசனில் மும்பை அணி பட்டம் வெல்ல அவர் உதவியுள்ளார். 
 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வருகிறார். 
 

நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் செயல்பட்டு வருகிறார். 2022 சீசனில் அவர் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் அந்த அணி பட்டம் வென்றது. 
 

நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக  செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியை 2011 முதல் 2013 வரையில் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தி உள்ளார். 
 

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி செயல்பட்டு வருகிறார். அந்த அணியோடு அவருக்கு இதுதான் முதல் சீசன். இதற்கு முன்பு ஹைதராபாத் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக 2021 மற்றும் 2023 சீசனில் செயல்பட்டுள்ளார். 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2009 முதல் ஸ்டீபன் பிளெமிங் செயல்பட்டு வருகிறார். இதுவரை அவரது பயிற்சியின் கீழ் 5 முறை சிஎஸ்கே ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது. சூப்பர் கிங்ஸ் ஃப்ரான்சைஸ் தரப்பில் எஸ்ஏடி20 மற்றும் எம்எல்சி கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராகவும் பிளெமிங் செயல்படுகிறார். 
 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இயங்கி வருகிறார். அந்த அணியோடு இதுதான் அவருக்கு முதல் சீசன். சில நிபந்தனைகளுடன் இந்த பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல். அணியை மொத்தமாக மாற்றி புத்துணர்ச்சி கொடுத்துள்ளார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in