I am in IPL rcb player Virat Kohli sharings
I am in IPL rcb player Virat Kohli sharings

IPL-ல் நான்... - விராட் கோலியின் 8 பகிர்வுகள்

Updated on
2 min read

“பேட்டிங்கில் ஆணவம் இருக்கக் கூடாது” எனும் ஆர்சிபி ஸ்டார் ப்ளேயர் விராட் கோலி ‘ஐபிஎல் அனுபவம்’ குறித்து உதிர்த்த தெறிப்புக் கருத்துகள் இவை...

“யாரையும் நாம் அதிகமாக மறைக்க செய்யவும் முயற்சிக்கக் கூடாது. எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும்.”

“நான் சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இந்த விஷயத்தில் நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.”

“நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன். வேறு யாராவது நல்ல ரிதமில் இருந்தால் அவர்கள் முன்னெடுத்துச் செல்வர்.” 

“ஆர்சிபியில் முதல் 3 ஆண்டுகளில், டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 2010-ல் சிறந்த திறனை வெளிப்படுத்தினேன்.”

“2011 வாக்கில், நான் தொடர்ந்து 3-வது இடத்தில் பேட்டிங் செய்தேன். அப்போதுதான் எனது ஐபிஎல் பயணம் உண்மையிலேயே வடிவம் பெறத் தொடங்கியது.”

“ஐபிஎல் தொடர் கட்டமைக்கப்பட்டு இருக்கும் விதத்தினால், அது தனித்துவமானதாகவும், மிகவும் சவாலானதாகவும் இருக்கிறது.”

“ஐபிஎல் ஒரு குறுகிய இரு தரப்புத் தொடர் போன்றது அல்ல, பல வாரங்கள் நீடிக்கும். புள்ளிகள் அட்டவணையில் உங்கள் நிலை மாறிக்கொண்டே இருக்கும்.”

“தொடர்ந்து மாறும் சூழல் பல வகை அழுத்தம் தரும். IPL-ன் இந்த இயல்பு மன ரீதியாக சவால் அளிக்கிறது. இதுவே எனது டி20 திறனை வளர்க்கிறது.”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in