கேரளா டைரீஸ்... 'பரம் சுந்தரி’ ஜான்வி கபூர்!
‘கேரளா டைரீஸ்’ எனும் ஹேஷ்டேகுடன் ஜான்வி கபூர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
பாலிவுட்டில் பிஸியான ஷெட்யூலுக்கிடையே இளைப்பாறும் வகையில் கேரளாவில் ‘வைப்’ செய்து வலம் வருகிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர்.
‘தடக்’ பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் மஹி’ படத்தில் கவனம் ஈர்த்தார்.
ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ள ‘உலாஜ்’ படமும் பரவலாக பேசப்பட்டது.
ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
இந்த ஆண்டு வெளியாகவுள்ள அவரது ‘பரம் சுந்தரி’ படம் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
ஜான்வியின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உண்டு.