‘குடும்பஸ்தன்’ குதூகல சான்வே மேகனா!
‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்த சான்வே மேகனா மீது தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வை படரத் தொடங்கியிருக்கிறது.
தெலங்கானாவைச் சேர்ந்த சான்வே மேகனா ‘பிட்டா கதலு’, ‘பிரேம விமானம்’ மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
தமிழில் ‘குடும்பஸ்தன்’ மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் சான்வே மேகனா.
‘குடும்பஸ்தன்’ படத்தில் நாயகியாக சான்வே மேகனா, காதல் மனைவியாக அழகாக நடித்திருக்கிறார்.
தமிழில் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அளவுக்கு சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
‘குடும்பஸ்தன்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், தமிழில் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
‘குடும்பஸ்தன்’ படத்தின் ரிலீஸும் வரவேற்பும் காரணமாக குதூகல மூடில் இருக்கிறார் சான்வே மேகனா.
இன்ஸ்டாவில் எப்போதும் எங்கேஜிங்காக ரசிகர்களுடன் இருந்து வருவது சான்வே மேகனா மற்றொரு ஸ்பெஷல்.