மெக்சிகோவில் வலம் வரும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த சமீபத்திய மெக்சிகோ ட்ரிப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
அடுத்து கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2’ படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழில் அவருக்கான ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.
மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த ஷூட்களுக்கு இடையே சமீபத்தில் ஓய்வுக்காக மெக்சிகோவுக்கு ட்ரிப் சென்றுள்ளார் மாளவிகா மோகனன்.
மெக்சிகோவின் பல்வேறு இடங்களில் வலம் வந்தபடி, அதனைப் புகைப்படங்களாகவும் பதிவு செய்து வருகிறார்.
குறிப்பாக, தான் சென்று வந்த இடங்கள் குறித்த குறிப்புகளையும் அனுபவங்களையும் வழங்கி வருகிறார்.
மாளவிகா மோகனனின் மெக்சிகோ பயணக் குறிப்புகளும் புகைப்படங்களும் செம்ம வைரல்.