எழுச்சி... மகிழ்ச்சி... சமந்தா!

Hindutamil

தமிழ், தெலுங்கு, இந்தி என சமந்தாவின் திரைப் பயணம் மலைக்கத்தக்கது.

Hindutamil

தொடர்ந்து பல வெற்றிகளைக் கொடுத்து வந்த சமந்தாவுக்கு 2020-க்கு பிறகு சறுக்கல் இருந்தது.

Hindutamil

‘யசோதா’, ‘சாகுந்தலம்’, ‘குஷி’ என அடுத்தடுத்து படங்கள் தோல்வியை தழுவின.

“தோல்விகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கெத்தாக ஒப்புக்கொண்டவர், மீண்டெழும் முயற்சியை கைவிடவில்லை.

பர்சனல் வாழ்க்கை, உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஃபீனிக்ஸ் போல் மீண்டெழுந்தார் சமந்தா.

“நான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக செயல்படுவேன் என்று ஒவ்வொரு முறை நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன்.” 

“ஒவ்வொரு கதாபாத்திரமும் முந்தைய கதாபாத்திரங்களை விட சவால் நிறைந்ததாக இருக்கும்” என்பது அவர் ஸ்டேட்மென்ட். 

‘ஃபேமிலி மேன் சீசன் 2’-வில் தனது கதாபாத்திரம், நடிப்பாற்றல் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்தார்.

சமீபத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியானது.

சிட்டாடல் தொடரில் ஹீரோவுக்கு இணையாக சமந்தாவும் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தினார். 

“இனி, பெண்களை நியாயமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்களையே தேர்வு செய்ய இருக்கிறேன்.” 

“ஒரு நாயகன் செய்வதை நாயகியும் செய்யலாம் என்பதை சிட்டாடல் வெப் தொடர் நிரூபித்துள்ளது.” 

“பெண்களைப் பொம்மையாகக் காட்டும் கதாபாத்திரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று உறுதியாக சொல்கிறார் சமந்தா.  

“நடிகை பிரியங்கா சோப்ரா, பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக்கொடுக்கிறார்” என்கிறார் சமந்தா.

இப்போது அடுத்த இந்தி வெப் சீரிஸுக்கு தயாராகி வருகிறார் சமந்தா.

Web Stories

மேலும் படிக்க...

Click Here