வேலைக்குச் செல்லும் பெண்கள் கவனத்துக்கு...

Hindutamil

வேலைக்குச் செல்லும் பெண்கள் சுமக்கும் கூடுதல் பொறுப்புகளை எவ்வாறு பகிர்ந்துகொண்டு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு பார்வை.   

Hindutamil

வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பணியிடத்திலோ வீட்டிலோ பெரும்பாலும் ஓய்வு இருக்காது. தன்னைக் கவனித்துக் கொள்வதற்கான நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.   

Hindutamil

அமைப்பு சாராப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்குக் குழந்தைகளைப் பராமபரிப்பதற்கான இடமும் சீரான பணி நேரமும் கிடைக்காது.

வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழலில்  ஒரே நேரத்தில் வீட்டுப்பொறுப்புகளையும், அலுவலக வேலையையும் கையாள தள்ளப்படுகிறார்கள்.

இணையர், குடும்பத்தினரின் உதவி இருக்கும்பட்சத்தில் பெரும்பாலான பெண்களால் சமாளிக்க முடிகிறது. ஆனால், ஆதரவற்ற பெண்கள் கடும் உளவியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.   

ஆணாதிக்கச் சமுதாயம் வேலைக்குச் செல்லும் பெண்களை அணுகும் விதமும் அவர்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள் உருவாகக் காரணமாகிறது.   

வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநிலை பிரச்சினைகளை மாதவிடாய் தொடர்பானதாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது.  

பெண்களின் பிரச்சினைகளைக் குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகுவது சரியான தீர்வை வழங்காது.

சமூகரீதியான மாற்றங்கள் ஏற்படும்போதுதான் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநல நெருக்கடிகள் வெகுவாகக் குறையும்.   

பாலியல் பேதமற்ற சம ஊதியம் போன்று கொள்கை சார்ந்த முடிவுகளைச் செயல்படுத்துவதுதான் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் தீர்வு.  

குற்ற உணர்வுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் தங்களுக்கான நேரத்தை - ஓய்வை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது போலத் தன்னுடைய உடல் நலத்தின் மீதும் மனநலத்தின் மீதும் கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும்.   

ஏதேனும் பிரச்சினை இருந்தால், வேறொருவரைச் சார்ந்திருக்காமல் உடனடியாகத் தீர்வுக்கான வழிகளைத் தேடுவது நல்லது! | டாக்டர் கார்த்திக் தெய்வநாயகம்   

Web Stories

மேலும் படிக்க...

Click Here