அல்சர் வராமல் தடுப்பது எப்படி?

Hindutamil

அல்சர் வருவதைத் தடுக்க முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். 

Hindutamil

கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். 

Hindutamil

மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். 

அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் நல்லது.

இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக் கூடாது.

எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. ஆகவே, இதைத் தடுக்கச் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். 

புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான் மசாலா பயன்படுத்தக் கூடாது. இந்தப் பழக்கங்கள் அனைத்துமே அல்சர் பிரச்சினைக்கு வித்திடும்.

மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.

Web Stories

மேலும் படிக்க...

Click Here