இரவில் பிரியாணி சாப்பிடலாமா? - அலர்ட் குறிப்புகள்

Hindutamil

“எப்போதாவது மதியம் பிரியாணி சாப்பிடுவது தவறு இல்லை. அதிலுள்ள பட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவை ஜீரணத்துக்கு உதவும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.”

Hindutamil

“பிரியாணியை தினமும் சாப்பிடுவது மற்றும் நள்ளிரவு, அதிகாலையில் சாப்பிடுவது பாதுகாப்பானது இல்லை. இது, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து.”

Hindutamil

“நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும்போது ஜீரணமாவதில் பிரச்சினை உள்ளது. அதனால் வரும் பிரச்சினை நெஞ்செரிச்சலா, நெஞ்சுவலியா என்பதை அவர்களால் கண்டறிய முடியாது.”

“பிரியாணி சாதாரண நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம் இணைநோய் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பை உண்டாக்கும்.”

“இதய நோய் உள்ளவர் இரவில் நன்றாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மதுவோ அல்லது குளிர்பானமோ குடித்தால், காலையில் மாரடைப்பு வரும் ஆபத்து உண்டு.”

“அவசரமாக சமைக்கப்படும் பிரியாணியில் இறைச்சிகள் வெந்தும், வேகாமலும் இருக்கும். அதனை சாப்பிடும்போது டைபாய்டு வருவதற்கு வாய்ப்புள்ளது.”

“தொடர்ந்து ஆட்டுக்கறியில் செய்யும் பிரியாணி, பரோட்டா குருமா சாப்பிட்டால், நார் சத்து இல்லாத காரணத்தால் பெருங்குடல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு.”

“பிரியாணியை தொடர்ந்து சாப்பிடும்போது உடல் பருமன் கூடும். அதன்மூலம் இதய பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, பக்கவாதம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரும் அபாயம் உண்டு.”

“இரவில் எப்போதும், எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் ஊட்டச்சத்துள்ள உணவை குறைவான அளவு சீக்கிரமாக சாப்பிட வேண்டும்.” 

“மட்டன் பிரியாணியை விட சிக்கன் பிரியாணி சிறந்தது. கொஞ்சம் சாலட் சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம். பிரியாணிக்கு பின் குளிர்பானம் குடிக்க கூடாது” என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Web Stories

மேலும் படிக்க...

Click Here