

என் சக்சஸ் ஃபார்முலா... - ‘ராம்ராஜ் காட்டன்’ கே.ஆர்.நாகராஜன் பகிர்வு
ஓர் எளிய விவசாய - கிராமப் பின்னணியில் பிறந்து இன்று தனது உழைப்பால் ராம்ராஜ் காட்டன் எனும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கே.ஆர்.நாகராஜனின் பகிர்வுகள்...
“என் இளம் வயதில் அனுபவித்த வறுமைதான். இளம் வயதில் தொழிலில் இறங்கும் தேவையை அதுதான் உருவாக்கிக் கொடுத்தது. வறுமைதான் பெரிய ஆசான்.”
“நமது சுய ஆசைகளை பூர்த்தி செய்ய நாம் வணிகம் செய்தால் பயம் வரும். ஆனால், நான் வறுமை நிலையில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணின்னேன்.”
“அந்த எண்ணத்துடன் மட்டுமே இயங்கியதால் தோல்வி பயம் வரவே இல்லை. 1983-ல் 50 தறிகள் இருந்தன. இப்போது 50,000 நெசவாளர் குடும்பங்கள் எங்களுடன் இருக்கின்றன.”
“இப்போது ராம்ராஜுக்கு தென்னிந்தியா முழுவதுமாக 300-க்கும் மேல் கிளைகள் இருக்கின்றன. 15,000 ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகின்றனர்.”
“இந்த ஆண்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம், அடுத்த ஆண்டு எவ்வளவாக அதை அதிகப்படுத்தலாம் என்றுதான் யோசிப்பேன். ”
“அதேபோல, அடுத்த ஆண்டு சமூக சேவைக்கு எவ்வளவு செலவிடலாம் என்றுதான் யோசிப்பேன். இதுவே வளர்ச்சியைக் கொண்டு வருகிறது.”
“எல்லாமே மாற்றத்துக்கு உரியது. ஆனால் தெளிவான நோக்கத்தில் மாற்றம் கூடாது என்பதுதான் வெற்றிக்கான சூத்திரம். காலத்துக்கு தகுந்தபடி சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
“வேலை செய்யத்தான் வயது உண்டு; தொழில் முனைவு ஊக்கத்துக்கு குறைந்தபட்ச வயது கிடையாது. அதேபோல தொழில் முனைவோருக்கு ஓய்வு வயதும் கிடையாது.”
“தொழில் தொடங்க அடிப்படையான விஷயங்கள் மூன்று: முதலீடு, அனுபவம், உழைப்பு.”
“எல்லாப் பூட்டையும் திறக்க சாவி உண்டு. சாவி இல்லாமல் எந்த பூட்டும் கிடையாது. அதேபோல வியாபார நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டு உழைத்தால் முதலீடு தேடி வரும்.”
“நேர்மையாக, திட்டமிட்டு செயல்படுங்கள்; படிப்படியாக வளருங்கள்; ஊழியர்களை பராமரியுங்கள்; தலைமைத் தகுதியை உறுதி செய்யுங்கள் என்பதே தொழில் முனைவோருக்கான என் அறிவுரை.”