தேன் எப்படி இனிக்கிறது?
வேலைக்காரத் தேனீக்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து, பூக்களில் உள்ள பூந்தேனை உறிஞ்சுகின்றன.
பூந்தேனில் பெரும்பாலும் நீரும் குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய சர்க்கரைகள்தாம் இருக்கின்றன.
உறிஞ்சிய பூந்தேன், தேனீக்களின் வயிற்றில் சேகரிக்கப் பட்டு, கூட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. இதனால் பூந்தேன் சில வேதி வினைக்கு உள்படுகிறது.
கூட்டில் இருக்கும் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து பூந்தேனைப் பெற்று, தங்கள் வாய்களால் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன.
அப்போது உருவாகும் நொதிகள் சர்க்கரைகளையும் புரதங்களையும் உடைத்து, அமிலக் கரைசலாக மாற்றுகின்றன.
இதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சைகளால் தேன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
70 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக நீர்ச்சத்து குறைந்த இந்தத் தேன் அறுகோண வடிவில் இருக்கும் தேன் கூட்டின் அறைகளில் வைக்கப்படுகிறது.
நீர்ச்சத்தைக் குறைக்கும் விதத்தில், தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் சூடான காற்றைச் செலுத்துகின்றன.
சூடான காற்றினால் இப்போது எளிதில் கெட்டுப்போகாத, இனிப்பான தேன் உருவாகிவிடுகிறது.