பணக்காரர் ஆக 10 பாடங்கள்!

மார்கன் ஹவ்சல் (MORGAN HOUSEL) எழுதிய ‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ (THE PSYCHOLOGY OF MONEY) புத்தகம் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்களை இங்கே...

பணக்காரர் என்பவர் யார் தெரியுமா? நிறைய பொருள்களை வைத்திருப்பவர் அல்ல... தனது தேவைகளை எவன் குறைத்துக் கொள்கிறாரோ, அவரே பணக்காரர் ஆவார்.

பணத்தைச் சேமிப்பதற்கு அறிவை விட, பழக்கமே முதலில் முக்கியமானது.

பணத்தை இளமையிலேயே சேமிக்கத் தொடங்கி விட்டால், அது அதிக பலன்களைத் தரும்.

சேமிப்புகளே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும். பங்களா, கார் வாங்குவதால் பணக்காரராக முடியாது. தேவையை சுருக்கி, சேமித்தால்தான் கோடீஸ்வரர் ஆக முடியும்.

கடன் வாங்கும்போது ஆட்டோ-டெபிட் முறையில் இஎம்ஐ செலுத்தும் நீங்கள், சேமிப்புக்கும் அதே முறையைப் பின்பற்றுங்கள். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பீர்.

பணத்தைப் பெருக்க சிறந்தது முதலீடா? சேமிப்பா? என்ற கேள்வி அடிக்கடி எழும். பல நேரங்களில் முதலீட்டை விட சேமிப்பே சிறந்தது எனத் தோன்றலாம்.

பணக்காரராவது பலராலும் முடியும். ஆனால், பணக்காரர் ஆக நிலைத்து நிற்பது, சேமிக்கும் பழக்கம் உள்ள சிலரால் மட்டுமே முடியும்.

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆவது, குறுகிய காலத்தில் பணத்தை அள்ளுவது நடைமுறையில் சாத்தியமே இல்லை. நீண்ட கால நோக்கில் சேமிப்பதே புத்திசாலித்தனம்.

உங்கள் ஈகோவையும், தற்பெருமையையும் குறைத்துக் கொண்டாலே பாதி செலவுகள் மிச்சமாகும்.

போதும் என்கிற மனம் உள்ள ஒருவரால் மட்டுமே பணத்தை சேமிக்க முடியும்.

Web Stories

மேலும் படிக்க...