முதியோரைத் தாக்கும் நோய்களை வெல்லும் வழிகள்

அறுபது வயதைக் கடந்தவர்களைச் சில குறிப்பிட்ட நோய்கள் தாக்கும். இதை ஆங்கிலத்தில் ‘Geriatric Giants’ என அழைக்கிறோம்.

நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களில் பலர் நகர முடியாமல் உடலில் போதிய பலமில்லாததால் அடிக்கடி கீழே விழுவர்.

அறிவுத்திறன் குன்றுதல், உடல் தளர்ச்சி, மனச்சோர்வு, பதற்றம், எலும்பு பலவீனம், மூட்டுத் தேய்மானத்தாலும் முதியவர்கள் பாதிக்கப்படுவர்.  

இந்தியாவில் 80 வயதைக் கடந்த முதியவர்களில் 44% பேர், அன்றாடச் செயல்பாடுகளுக்குப் பிறரைத்தான் நம்பியுள்ளனர்.  

குளிப்பதற்கோ, உணவருந்துவதற்கோ, இயற்கை உபாதைகளான சிறுநீர், மலம் கழிக்கவோ பிறரது உதவியில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

முதுமையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கையை மருத்துவரின் அறிவுரைப்படி குறைத்துக் கொள்வது நலம்.

65 வயதைக் கடந்த முதியவர்களில் 60% பெண்களும் 35% ஆண்களும் சிறுநீரை அடக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். 

உடல் தளர்ச்சியைக் குறைக்க முதுமையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும். போதுமான அளவு உறக்கம், உடற்பயிற்சி வேண்டும்.  

சுவாசத் தொற்று, சிறுநீர்த் தொற்று, வைரஸ் கிருமி தொற்று போன்றவற்றால் முதியவர்கள் சுயநினைவைத் திடீரென இழக்கக்கூடும்.   

தாழ்நிலை ரத்தச் சக்கரை, நீர்ப் பற்றாக்குறை, தாது உப்புகளின் குறைபாடு போன்றவையும் வயதான காலத்தில் சித்த பிரமையை ஏற்படுத்தலாம்.  

சில மருத்துகளின் பின்விளைவுகளும் முதியோரிடத்தில் சித்த பிரமையை ஏற்படுத்தலாம். கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடனடி சிகிச்சைகளே சித்த பிரமைக்குத் தீர்வாகும்.  

வீடுகளில் வயதானவர்கள் இருக்கும்போது தொடர் சிகிச்சைக்காக அவர்கள் உண்ணும் மாத்திரை பயன்பாட்டை மருத்துவர் ஆலோசனை இன்றி நிறுத்தக் கூடாது.  

முதியவர்களைப் பிள்ளைகள், உறவினர்கள் அவர்கள் நேரடிப் பார்வையில் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றின் மூலம் முதியோர்களை கடும் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும். | தொகுப்பு: டாக்டர் இ.சுப்பராயன் 

Web Stories

மேலும் படிக்க...