ஒட்டகம்: 50 டிகிரியிலும் வியர்க்காது!

இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை.

சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை.

சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை.

ஒட்டகம் குறுகியகால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது.  

50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.

பாலைவன விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன.   

மூக்கு, வாய் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. 

முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.  

ஒட்டகச் சவாரி என்பது புதுமையான அனுபவம். புதிதாக ஏறுபவர்களுக்கு இது அச்சம் கலந்த சிலிர்ப்பைத் தரும்.  

பாலைவனத்தை சுற்றியுள்ள வறண்ட பூமியில் விவசாயத்துக்கு ஒட்டகங்கள் உறுதுணையாக இருக்கின்றன. 

நம் ஊர்களில் ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை நடப்பது போல ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகச் சந்தை பிரபலம். | கைடன்ஸ்: வை.ரவீந்திரன்

Web Stories

மேலும் படிக்க...