மழைக் காலத்தில் குழந்தைகள் நலன் காக்க..!

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்படும். இது குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும்.  

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.  

மழைக்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  

குழந்தைகளுக்கு மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வைரஸ் தொற்றுகள், 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை 3 முதல் 5 நாள்கள் வரை மிதமாகவோ, கடுமையாகவோ தாக்கக்கூடியவை.  

சமீப காலத்தில் 7 முதல் 10 நாள்கள் வரை காய்ச்சல் நீடிக்கிறது. எனவே குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மேல்சுவாசத் தொற்று ஏற்படக்கூடும். இது தீவிர இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மழைக்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க தொற்று டெங்கு காய்ச்சல்.  

குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகளால் மூச்சுத்திணறல் ஏற்படலாம். மூச்சுத்திணறல் பிரச்சினையைச் சரிசெய்ய உடனடியாக நெபுலைசேஷன் தேவைப் படுகிறது.

இத்தகைய சூழலில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பதும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் மிகவும் அவசியம் | கைடன்ஸ்: டாக்டர் மாதுரி பிரபு  

Web Stories

மேலும் படிக்க...