புயல் Vs சூறாவளி - வேறுபாடு என்ன?

புயலுக்கும் சூறாவளிக்கும் அதிக வேறுபாடு இல்லை.

வட அட்லாண்டிக் கடலிலும் வடகிழக்கு பசிபிக் கடலிலும் உருவாகும் சூறாவளியை ‘ஹரிகேன்’ என்று அழைக்கிறார்கள்.   

ஹரிகேன் மணிக்கு 119 - 153 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.   

ஹரிகேன்கள் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள சூடான கடல் நீரில் மட்டுமே உருவாகின்றன. 

வடமேற்கு பசிபிக் கடலில் வீசும் சூறாவளியை ‘டைபூன்’ என்று அழைக்கிறார்கள். இதில் மணிக்கு 118 - 148 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.   

டைபூனால் அதிகம் பாதிக்கப்படுவது பிலிப்பைன்ஸும் ஜப்பானும்தான். காற்றின் வேகத்தைப் பொறுத்து ‘டைபூன்’, ‘சூப்பர் டைபூன்’ என்றெல்லாம் பிரித்து இருக்கிறார்கள்.  

தென் பசிபிக் கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் வீசும் காற்றுக்குப் ‘புயல்’ என்று பெயர். இதில் மணிக்கு 30 - 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்  

Web Stories

மேலும் படிக்க...