ஆப்பிள், கப்பல் நீரில் மிதப்பது எப்படி?
ஆரஞ்சு, மாதுளை, கொய்யா போன்ற பழங்களைத் தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகின்றன. ஆப்பிள் மட்டும் தண்ணீரில் மிதக்கிறதே ஏன்?
ஆரஞ்சு, மாதுளை, கொய்யா போன்ற பழங்களின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியைவிட அதிகமாக இருப்பதால் அவை மூழ்கிவிடுகின்றன.
பழுத்த ஆப்பிளில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கிறது. தண்ணீரைவிட ஆப்பிளின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. அதனால், ஆப்பிள் தண்ணீரில் மிதக்கிறது. ஆப்பிள் சரி.
இதேபோல்தான் கப்பல் எப்படி மூழ்காமல் மிதந்துகொண்டே செல்கிறது என்கிற கேள்வியும் எல்லோருக்கும் பொதுவானது தான்.
பொருளின் எடை, மிதப்பு விசையைவிடக் குறைவாக இருந்தால், அந்தப் பொருள் மிதக்கும். பொருளின் எடை மிதப்பு விசையைவிட அதிகமானால் அந்தப் பொருள் மூழ்கும்.
கடலில் கப்பல் செல்லும்போது அதன் எடைக்கு நிகரான தண்ணீர் அந்த இடத்திலிருந்து இடம்பெயராதபடி, கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கப்பலின் எடையைவிட மிதப்பு விசை அதிகமாக இருப்பதால் கப்பல் மூழ்காமல் மிதக்கிறது.