மனிதர்கள் அழுவது எதற்காக?

அழுது முடித்தவுடன் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் புத்துணர்வை உணர்கிறோம். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே உணர்வுபூர்வமான கண்ணீர் வருவதில்லை.

கண்ணீர் மனிதர்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவே, நம்பிக்கையை வலுப்படுத்தவே கண்ணீர் சுரப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பேச்சு, சைகையைப் போல அழுகையும் தகவல்களைப் பரிமாற உதவும் மொழிதான். ஆனால், அழுகை மற்ற தகவல் பரிமாற்றங்களைவிடச் சக்தி வாய்ந்தது.

மனிதர்களை இணைக்கக்கூடியது அழுகை. அதுபோல மனிதர்களை வலுவாக ஒன்றிணைக்கும் தகவல்தொடர்பு வேறு எதுவும் இல்லை.  

அழுகை என்பது நாம் தொந்தரவுக்கு உள்ளாகி இருக்கிறோம் என்பதைப் பிறருக்கு உணர்த்துகிறது. 

அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் நேரத்தில் ‘எனக்கு உதவி தேவை’ என்பதைத் தெரிவிக்கவே கண்ணீர் வெளிப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  

அழுகையைக் காணும்போது ஒருவருக்குள் இருக்கும் போட்டி எண்ணம் குறைந்து, உதவும் மனப்பான்மை துளிர்விடுகிறது.

உண்மையில் மற்ற உடல்மொழிகளைவிட அழுகை மூலம் உணர்த்தப்படும் செய்தியில்தான் அதிக நம்பகத்தன்மையை மனிதர்கள் உணர்வதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

திரைப்படங்கள் பார்த்தே  நாம் மனம் இரங்குகிறோம் என்றால் அழுகைக்கு இருக்கும் ஆற்றலைப் புரிந்துகொள்ளுங்கள். | தொகுப்பு: நன்மாறன் திருநாவுக்கரசு

Web Stories

மேலும் படிக்க...