மனிதர்களின் குதிரை பயணம் - ஒரு ரவுண்டப்

இன்று பயணத்திற்காக விமானம், ரயில், பேருந்து, கார், பைக் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், ஆதிகாலத்தில் மக்கள் எவ்வாறு பயணம் செய்திருப்பார்கள்?  

மனிதர்கள் பயணத்திற்கு ஆரம்பத்தில் தங்கள் கால்களையே நம்பியிருந்தனர். பிறகு வளர்ப்பு விலங்குகளின் மீது ஏறி, பயணம் செய்ய ஆரம்பித்தனர். 

பயணத்துக்குப் பயன்படுத்திய விலங்குகளில் முக்கியமானது குதிரை. மற்ற எந்த விலங்கையும்விட குதிரை வேகமாக ஓடும். நீண்ட தூரத்துக்கும் செல்லும்.

குதிரைகளை மனிதர்கள் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்பதற்கான விடை ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.  

வெண்கலக் காலத்தில் வசித்த மனிதர்களின் எலும்புகளில் குதிரை மீது பயணம் செய்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்திருக்கிறது.  

ஒரு மனிதர் குதிரை மீது சவாரி செய்தாரா என்பதை இடுப்பு, தொடை போன்ற எலும்புகளில் இருக்கும் 6 அடையாளங்களின் மூலம் அறியமுடியும்.   

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் எலும்புகளில் இந்த அடையாளங்கள் இருந்ததன் மூலம் குதிரைகளின் மீது பயணம் செய்தது உறுதியாகியிருக்கிறது.  

ஆராய்ச்சிக்கு முன்பு, மனிதர்கள் குதிரைகளைப் பயன்படுத்தியதும் குதிரையின் பாலைப் பருகியதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டிருக்கிறது. 

குதிரையைப் பயன்படுத்தி, பயணம் செய்ததை இந்த ஆய்வுதான் முதல் முறையாக ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.   

குதிரைகளைப் போர்க்களத்தில் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

Web Stories

மேலும் படிக்க...