பாத வெடிப்பு: காரணமும் தீர்வும்

பாத வெடிப்பு, பித்த வெடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாதங்களின் தோலில் ஏற்படும் வறட்சியான நிலையைக் குறிக்கிறது. இது வலி ஏற்படுத்தலாம்.    

கோடைக்காலம், குளிர்காலம், குறைந்த ஈரப்பதம், நீர்ச்சத்து குறைவாக இருப்பது போன்ற காரணிகளும் தோல் வறட்சிக்கு வழிவகுக்கும்.   

அதிக உடல் எடை காரணமாகப் பாதங்களில் அழுத்தம் அதிகரித்து, தோலில் வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தாலும் பாத வெடிப்புக்கு ஆளாகக்கூடும்.

சர்க்கரை நோய், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது, ஒவ்வாமை போன்ற சில மருத்துவ நிலைமைகள் பாத வெடிப்புக்கு வழி வகுக்கும்.  

சரியான செருப்பு அணியாமல் இருப்பதும் பாதவெடிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.  

பாதவெடிப்புகளில் தினமும் இரண்டு வேளைக்கு ஈரப்பதமேற்பிகளைப் (Moisturizer) பூசினால் பலன் கிடைக்கும்.

தினமும் 10-15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பது தோலை மென்மையாக்க உதவும்.

எந்தக் காரணத்தால் பாதவெடிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பது அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். |  கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...