தேவாங்கு ஏன் அதிசய விலங்கு?

சிறிய வகைப் பாலூட்டிகளிலேயே மனிதர்களால் வெறுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட, பேரழிவைச் சந்தித்த உயிரினம் தேவாங்குகளாகத்தான் இருக்க முடியும்.

தேவாங்கு என்னும் சிறிய உருவமுடைய பாலூட்டியானது ஓர் இரவாடி. Primates எனப்படும் குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளில் தேவாங்கும் ஒன்று.

தேவாங்குகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை 1) சாம்பல் தேவாங்கு 2) செந்தேவாங்கு. சாம்பல் தேவாங்கு தென்னிந்தியா,இலங்கையிலும், செந்தேவாங்கு இலங்கையிலும் காணப்படுகின்றன.  

உருண்டையான தலை, துருத்திய பெரிய கண்கள், புசுபுசு என்கிற ரோமம், குச்சி போன்ற கைகளும் கால்களும், மொட்டையான வாலும் கொண்ட தோற்றத்தைப் பெற்றது.  

அழகு என்று நமக்குப் போதிக்கப்பட்ட வரையறையின்படி பார்த்தால், தேவாங்கின் தோற்றம் நம் ஆர்வத்தைச் சட்டென்று கவர்வதில்லை.

பகலில் தேவாங்கைக் காண்பது அபூர்வம். அடர்ந்த மரக்கிளைகளில் உள்ள பொந்துகள் அல்லது கூடுகளில் ஓய்வெடுக்கும். இரவில் மட்டுமே சுறுசுறுப்பாக இரை தேடும்.

இவற்றின் கைகளும் கால்களும் அதிகப் பிடிப்புத்திறன் கொண்டுள்ளதால், கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடி இருக்கவும் வசதியாக உள்ளது.

இவை உண்ணும் இலை தழைகளிலேயே தேவையான நீர்ச்சத்து கிடைப்பதால் தேவாங்குகள் தனியாக நீர் அருந்துவதில்லை. வாரத்திற்கு ஒருமுறைதான் மலம் கழிக்கும்.  

தேவாங்கின் குட்டிகள் குரங்குக் குட்டிகள்போலத் தாயின் மார்பை அணைத்தபடியே பயணிக்கும். அதன்பின் தனித்து விடப்படும். 

மந்திரங்கள், கலாச்சார நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட மற்ற விலங்குகளைவிட தேவாங்குகள்தாம் அதிக அழிவைச் சந்தித்துள்ளன.  

புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் ஆகியவற்றைத் தேவாங்கு உணவாகக் கொள்வதால், இயல்பாகவே இவை விவசாயிகளின் தோழனாகக் கருதப்படுகிறது. | தொகுப்பு: பா.கிருஷ்ணராஜ்

Web Stories

மேலும் படிக்க...