‘கொக்குகளின் வாழ்வியல்’ - ஒரு சிறப்பு பார்வை

நீண்ட நாள்கள் நீர் வற்றாத, உயிரினங்களால் எவ்வித அச்சுறுத்துதலும் இல்லாத பாதுகாப்பான இடங்களில் மட்டுமே கொக்குகள் கூடுகட்டுகின்றன.   

கூடுகள் காற்றினாலோ மழையினாலோ கவிழ்ந்துவிடாமல் இருக்க கருவேல மரத்தின் முட்கள் வலுசேர்க்கிறது. இதனாலேயே இம்மரங்களை அவை விரும்புகின்றன.  

கொக்குகளின் குடியிருப்பைச் சுற்றி எச்சத்தால் உருவான நெடி எப்போதும் காற்றில் கலந்திருக்கும்.    

கொக்குகளின் இனப்பெருக்கக் காலம் மழைக்காலமான அக்டோபர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நீள்கிறது.

கொக்குகள் ஒரு பருவத்தில் 4 முதல் 6 முட்டைகள் வரை இடுகின்றன. ஆணும் பெண்ணும் மாறிமாறி அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்க வைக்கின்றன.   

கொக்கு குஞ்சுகள் பிறந்து சுமார் 45 நாள்களில் பறக்கும் திறனைப் பெற்று விடுகின்றன.

ஓர் ஆண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், தொடர்ந்து ஒவ்வோர் இனப்பெருக்கப் பருவத்திலும் இவை அதே இடத்தில் குழுமி வசிக்கின்றன. 

ஒவ்வோர் ஆண்டும் புதிய புதியத் தலைமுறைக் கொக்குகள் உருவாகிக்கொண்டே இருப்பதால், அக்கொக்குக் கூட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  

இருக்கும் இடத்தில் ஏதாவது அச்சுறுத்தலினால் கொக்குகள் கலைந்துவிட்டால், மறு ஆண்டிலிருந்து அந்த இடத்திற்கு வராது.

திடீரென அதிகளவில் ஏற்படும் சத்தம், அடிக்கடி இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆள்நடமாட்டம் போன்றவை கொக்குகளை இடப்பெயர வைக்கின்றன.

கொக்குகள் பறத்தலின்போது ஒருவித ஒழுங்கைப் பின்பற்றுவதை இயல்பூக்கமாகப் பெற்றிருக்கின்றன. கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி கூரிய அலகால் காற்றைக் கிழித்து உயரமாக வெகுதூரம் பறக்கின்றன.  

கொக்குகளின் பருமனற்ற மெல்லிய தேகமும் கூர்மையான அலகும் எளிதாகப் பறப்பதற்கு உதவுகின்றன.   

நீரில் நனைந்து தொங்கும் இறக்கைகளை வெயிலில் காயவைப்பதும், கலைந்த அவற்றின் சிறகுகளை அலகினால் சீர்செய்வதுமான அன்றாட பணிகள் அவற்றிற்கு அழகு சேர்க்கின்றன.  

ஓர் இடத்தில் கூடி வாழும் கொக்குகளின் எண்ணிக்கை அப்பகுதியின் சுற்றுப்புறங்களில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையைவிடவும், அதிகமானதாக இருக்கிறது.   

வாழ்க்கை முறையை உடைய இவ்வகையான கொக்குகளின் பாதுகாப்பிற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் வாழ்வதே மனிதர்களின் அறிவார்ந்த தன்மை. | தொகுப்பு: த.ஜான்சி பால்ராஜ்

Web Stories

மேலும் படிக்க...