பட்டாசு உஷார்... கண் பாதுகாப்பு கைடன்ஸ்
பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுக் கண் மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் குழந்தைகளும் இளம் பருவத்தினரும்தான்.
பட்டாசு வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்புக்கான சில வழிமுறைகள் இதோ...
ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குப் பட்டாசு வெடிக்கக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள், பெற்றோர் உதவியுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்.
வெடிக்காத பட்டாசைக் கையில் தொடக் கூடாது. அதன் மீது தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் இல்லையென்றால் அது வெடித்து விபத்து ஏற்படக்கூடும்.
உடையாத பாதுகாப்பு கண்ணாடி அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது ஒரு வாளி முழுவதும் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகத் தீயை அணைக்க அது உதவும்.
நீளமான பத்தி கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடித்து முடித்த பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
கை கழுவவில்லை என்றால் பட்டாசில் உள்ள வேதிப்பொருள் கண்ணில் பட்டால் கண் எரிச்சல் ஏற்படும்.
பட்டாசு வெடிக்கும்போது எரிந்து முடிந்த மத்தாப்புக் கம்பிகளைத் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் போட வேண்டும்.
பட்டாசு வெடிக்கும்போது கண்ணில் காயம் ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்து வரை அணுக வேண்டும். கண்ணைத் தேய்க்கவோ அழுத்தவோ கூடாது.
பட்டாசு வெடித்து உண்டான காயத்திற்கு உடனடியாக 108 அவசர சேவையை அழைத்தால் சரியான சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்வர் | தகவல்: டாக்டர் பெ.ரங்கநாதன்