மழைக் காலம்: கேட்ஜெட் ‘பத்திரம்’ டிப்ஸ்

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேட்ஜெட்களை மழைக்காலங்களில் பாதுகாப்பதற்கான சில ஸ்மார்ட்டான டிப்ஸ் இதோ..

மழை நேரங்களில் ஸ்மார்ட்போன், இயர் பட், பவர் பேங்க் போன்றவற்றை எடுத்து செல்பவர்களுக்கு சிரமம்தான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கலாம்

ஜிப் லாக் பவுச்களை பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட நம் செல்போன் உட்பட சிறிய ரக எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ரெயின் கோட் இது. 

பைகளில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை வைத்துக் கொள்ளலாம். இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் ஈரத்தை விரைவாக இழுக்கும் தன்மை கொண்டவை.

மழை நேரங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஈரமாக இருந்தால் சார்ஜ் செய்ய வேண்டாம். சிலிக்கா ஜெல் பயன்படுத்தி ஈரப்பதத்தை நீக்கலாம்.  

வாட்டர் ப்ரூப் திறன் கொண்ட பேக் பயன்படுத்தலாம். பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது வாட்டர் ப்ரூப் திறன் கொண்ட பேக்தான்.

ஈரப்பதம் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை ஸ்விட்ச் ஆப் அரிசியில் வைக்கலாம். அது ஈரத்தை உறிஞ்சும். | தொகுப்பு: எல்லுச்சாமி கார்த்திக்

Web Stories

மேலும் படிக்க...