தொண்டை வலிக்கு எளிய மருத்துவம்
தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவதுபோல் வலிக்கும்.
சில நேரம் தேவைப்பட்டால் தொண்டையில் இருக்கும் திசுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.
தொண்டை வலி வைரஸால் வந்திருந்தால் Antibiotic-க்கால் பலன் கிடையாது.
நம்முடைய உணவுப் பழக்கத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை இயல்பாக அதிகரிப்பதே சிறந்தது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்திக்கு துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு, திப்பிலி, தேயிலை போட்டு தேநீர் வைத்துக் குடிக்க வேண்டும்.
சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். கதிராதி வடி என்ற மாத்திரையை வாயில் சுவைக்க வேண்டும்.
5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மை கொண்டது என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும். | கைடன்ஸ்: மருத்துவர் டாக்டர் எல்.மகாதேவன்.