நீங்கள் யார்? - 10 Quotes by தாமஸ் ஜெபர்சன்
அமெரிக்காவின் 3-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் தாமஸ் ஜெபர்சன். வரலாற்று அறிஞரும், தத்துவவாதியான இவர் உதிர்த்த 10 மேற்கோள்கள்...
“நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்; செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.”
“தாமதம் என்பது தவறுக்கு முன்னுரிமைக்கு உரியதாக உள்ளது.”
“நான் கடந்த கால வரலாறு தொடர்பான கனவுகளைவிட எதிர்காலம் பற்றிய கனவுகளையே விரும்புகிறேன்.”
“ஒரு சிறந்த சிந்தனையின் ஒளியானது, எனக்கு பணத்தைவிட அதிக மதிப்பினை உடையது.”
“புத்தகங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.”
“ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம் நேர்மை.”
“அரசியல், மதம் மற்றும் தத்துவம் போன்றவற்றில் எனக்கு ஒருபோதும் கருத்து வேறுபாடு கிடையாது; இவை நட்பினை பிரித்துவிடக் கூடியவை.”
“கோபமாக இருக்கின்றீர்களா? பேசுவதற்கு முன் பத்து வரை எண்ணுங்கள்; மிகவும் கோபமாக இருக்கின்றீர்களா? நூறு வரை எண்ணுங்கள்.”
“தைரியம் உடைய ஒரு மனிதன் பெரும்பான்மையான பலத்திற்கு சமமானவன்.”
“மற்றவருக்கு நன்மை செய்வதில் ஒவ்வொரு மனித மனமும் மகிழ்ச்சியை உணர்கின்றது என்று நம்புகிறேன்.”