அலர்ஜி ஆஸ்துமா - ஒர்க் அவுட் அலர்ட்

ஒவ்வாமையா ஆஸ்துமா பிரச்சினை வருவோருக்கு மூச்சுப் பயிற்சிகள் நல்லது. அதோடு, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

பொதுவாக ஆஸ்துமா உள்ளவர்கள், குளிர்ச்சியான சூழல்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

மாசு, தூசி, பூக்கள், மகரந்தங்கள் போன்ற ஒவ்வாமைப் பொருள்கள் உள்ள இடங்களில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.  

பயிற்சிகளுக்கு முன்னால் மூச்சுக்குழலைத் தளர்த்தும் இன்ஹேலர் மருந்தை இரண்டு முறை உறிஞ்சிக்கொள்ளலாம்.  

‘வார்ம்-அப்’ செய்த பின்னர் படிப்படியாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜிம்முக்குச் செல்லலாம். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டியது அவசியம்.  

உடற்பயிற்சிக்கும் ஆஸ்துமாவுக்கும் உள்ள தொடர்பின் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். ‘உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா’ என்றே ஒரு வகை ஆஸ்துமா உண்டு.  

உடற்பயிற்சி செய்யும்போது ஆஸ்துமா எந்த வகையிலாவது அதிகரிக்குமானால் அந்தப் பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...