பின்னோக்கி நடைப் பயிற்சி செய்யலாமா?

நடைப்பயிற்சி செய்வோரிடம் பின்னோக்கி நடை பயில்வது அதிகரித்து வருகிறது. இது சரியா, ஏதேனும் பாதிப்பா என்பதை அறியலாம்.   

பின்னோக்கி நடக்கும்போது தொடையில் உடலில் தசைகள் வலுப்பெறுகின்றன.

பின்னோக்கி நடப்பது முழங்காலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.  

முன்னோக்கி நடப்பதைவிட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது என்றும், உடலின் சமநிலையை அதிகப்படுத்துகிறது என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.  

பின்னோக்கி நடக்கும்போது ஓர் எச்சரிக்கை உணர்வு தேவைப்படுவதால், மூளையின் கவனம், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் செயல்திறன் கூடுகிறது.

பின்னோக்கிய நடையில் இதயத்தின் செயல்பாடும் நுரையீரலின் திறனும் அதிகரிக்கின்றன.

பின்னோக்கி நடை பயில்வோர் தடுமாறி கீழே விழச் சாத்தியமுண்டு. அதைத் தவிர்க்க, நன்கு பழகிய இடங்களில் பயிற்சி செய்ய வேண்டும்.  

பின்னோக்கிய நடையை மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகவே வேகத்தைக் கூட்ட வேண்டும்

சரியான காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.  

Web Stories

மேலும் படிக்க...