முட்டை மஞ்சள் கரு நல்லதா?
முட்டையின் வெள்ளைக்கரு முழுவதும் புரதம், மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
வெள்ளைக்கரு, மஞ்சள் கரு இரண்டிலும் ஏறத்தாழ ஒரே அளவுக்குத்தான் புரதம். மஞ்சள் கருவையும் சேர்த்துகொண்டால் புரதம் முழுவதுமாகக் கிடைக்கும்.
முட்டையின் மேல் இருக்கும் பயம் அதிலுள்ள கொழுப்பில்தான் ஆரம்பிக்கிறது. கொழுப்பு என்பது வேறு. கொலஸ்டிரால் என்பது வேறு.
100 கிராம் முட்டையில் பத்து கிராம் கொழுப்பு இருக்கிறது. பலன் தரும் கொழுப்பு 6.8கி. தினமும் உடலுக்கு 40 கிராம் கொழுப்பு தேவை.
100 கிராம் எடையுள்ள முட்டையில் 373 மி.கிராம் கொலஸ்டிரால்தான் இருக்கிறது. நமது உடலுக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவை.
முட்டையில் இருக்கும் கொலஸ்டிரால் குறித்து நாம் அதிகமாகவே அச்சப்படுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
குழந்தைகளுக்குத் தினமும் 50 கிராம் முட்டைகள் 2 கொடுக்கலாம். ஆரோக்கியமிக்க பெரியவர்களும் தினசரி 2 முட்டைகள் மஞ்சள் கருவுடன் சாப்பிடலாம்.
சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள், ரத்தத்தில் கொலஸ்டிரால் உள்ளவர்கள் மஞ்சள் கருவுடன் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.
சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் மட்டும் மருத்துவரின் நேரடி ஆலோசனைப்படி முட்டையைச் சாப்பிட வேண்டும்.
வேகவைத்த முட்டைதான் சிறந்தது. எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்ப்பது நல்லது.| கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.