உடல் பருமன் - சிறுதானிய தீர்வு
பசித்துப் புசிப்பது என்ற நிலையிலிருந்து, கிடைப்பதைத் தின்பது என்ற நமது உணவுப்பழக்கம் மாறிவிட்டதால், சத்தானஉணவு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.
பொறித்த, வறுத்த எண்ணெய் உணவுகளே இன்றைக்கு அவைதாம் முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதிக்கும் மக்களுக்கு சிறுதானியங்களே சிறந்த தீர்வு.
மழை இல்லா இடங்களிலும் கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, அரிசி, கோதுமை உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் இயற்கையின் கொடையாகும்.
கோயில் கோபுரங்களில் சிறுதானியங்களைப் பாதுகாத்து வைத்தனர். அதில் பொதிந்து கிடக்கும் அறிவியலை பார்த்தால், நம் முன்னோர்களின் தொலைநோக்கை அறியமுடியும்.
குழந்தைகள், பெரியவர்கள் என பெரும்பாலானோருக்கு உள்ள பெரும் பிரச்சினை உடல் பருமன். இந்தப் பிரச்சினைக்கு சிறுதானியங்கள் சிறந்த தீர்வு.
வெள்ளை அரிசியைவிட சிறுதானியங்களில் மாவுச்சத்து 20% குறைவு. அரிசி உணவை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதே உடல் பருமனுக்கு காரணம்.
சிறுதானியங்களில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் என்பதால் உடல் பருமனாகாது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். செரிமானம் நன்றாக இருக்கும்.
அரிசியோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் இரும்பு போன்ற சத்துக்கள் அதிகம். உடல் பருமனாகாது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.