வாயு தொல்லை: எதிரிகள் எவை?
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகியவை ‘வாயு தொல்லை’யின் அறிகுறிகள்.
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகளை குறைக்க வேண்டும்.
வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன் அதிகம் கூடாது.
செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால் உணவுகளில் கட்டுப்பாடு தேவை.
பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றை முடிந்தவரை குறைப்பீர்.
எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள்.
தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர்: கு.கணேசன்