தைராய்டு கோளாறு: அறிகுறி to உணவு முறை

தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம்.   

உடல் சோர்வு, செயலில் மந்தம், குளிரை தாங்க முடியாதது, முகம் வீங்குதல், முடி கொட்டுதல், இளநரை, தோல் வறட்சி மூலம் ஆரம்ப நிலையை அறியலாம்.  

பசி குறையும்; ஆனால், உடல் எடை அதிகரிக்கும். அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு ஏற்படும்.

குரலில் மாற்றம், கை, கால்களில் மதமதப்பு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.   

ரத்தசோகை, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்ற பாதிப்புகள் ‘குறை தைராய்டு’ உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ண வேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.  

கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிடுவது அவசியம். 

பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.   

மருத்துவர் ஆலோசனையோடு, கழுத்துக்கான உடற்பயிற்சி / யோகாசன பயிற்சி செய்தால் மேற்கொண்டால், தைராய்டு பிரச்சினையை தடுக்க, தள்ளிப்போட முடியும்.  

தைராக்சின் மருந்தின் அளவு, அதற்கான கால அளவை மருத்துவரே தீர்மானிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தை நிறுத்தக் கூடாது.

குறை தைராய்டு பாதிப்புக்கு மருத்துவரின் ஆலோசனையுடன் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...