தூக்க மாத்திரை நல்லதா? - ஓர் அலர்ட்
நன்றாகத் தூங்கி எழுவதற்கு தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல
தூக்க மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம்.
தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.
அதிக காலம் தூக்க மாத்திரையைப் பயன்படுத்தினால் ஞாபக மறதி ஏற்படும். பகலில் மயக்க நிலை வரும். நடை தடுமாறும். மனக் குழப்பம் தலைகாட்டும்.
முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத மாத்திரைகளை மருத்துவர்களே பரிந்துரைப்பர். | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர்: கு.கணேசன்.