அஜீரணக் கோளாறு - அறிகுறி to உணவு முறை

உணவு உண்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கலும் அஜீரணக் கோளாறுக்கு அறிகுறிகளே.

குறிப்பாக வயிற்றில் இரைச்சல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவையும் அஜீரணத்தின் அறிகுறிகள். தவிர்க்கும் வழிகள் யாதெனில்...

சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சமச்சீர் உணவு வகைகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உண்ணுங்கள்.

அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் சாப்பிடலாம்.

பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவை குறைத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், உணவின் ஒரு பகுதியாகத் தினசரி இருக்கட்டும். இரவில் தினமும் இரண்டு பழங்களை உண்ணுங்கள். 

வயிற்றில் வாயுவை உருவாக்கும் மொச்சை, பயறு, பட்டாணி போன்றவற்றை வயதானவர்கள் தவிர்க்க வேண்டியது முக்கியம். 

அஜீரணம் ஏற்பட்டால் மருத்துவரிடம் பரிசோதித்து, காரணத்தை அறிந்து சிகிச்சை பெறுங்கள். சுய சிகிச்சை வேண்டாம். 

காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் அவசியம். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.

Web Stories

மேலும் படிக்க...