லிங்கனின் 8 மேற்கோள்... யார் நண்பன்?
அமெரிக்காவின் 16-வது அதிபரும், அடிமை முறையை ஒழிக்க பாடுபட்டவருமான ஆபிரகாம் லிங்கன் உதிர்த்த அட்டகாசமான 8 மேற்கோள்கள்...
“நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.”
“ஒரு மரத்தை வெட்ட எனக்கு 6 மணிநேரம் கொடுங்கள்; அதில் முதல் 4 மணி நேரத்தை கோடரியை கூர்படுத்தவே செலவிடுவேன்.”
“எல்லோரையும் சில நேரம் ஏமாற்றலாம்; சில பேரை எல்லா நேரமும் ஏமாற்ற முடியும்; ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.”
“உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள் நண்பன்.”
“நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.”
“வெற்றிகரமான பொய்யராக வருமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான நினைவாற்றல் கிடையாது.”
“இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.”
“எதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள் வந்தே தீரும் என்பதே.”