வாய் நாற்றம் வராமல் தடுப்பது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்

தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும்.   

கடினமான பிரஷ்களை பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பிரஷ்தான் நல்லது.

சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். அப்போது, நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.  

நாக்கின் பின்புறத்தை நன்றாக சுத்தப்படுத்துங்கள். அங்கு 80% பாக்டீரியாக்கள் உள்ளன. பலருக்கும் வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

அசைவ உணவு சாப்பிடுவோர் பல்குச்சி பயன்படுத்துவர். இதில் கவனம் தேவை. குச்சிக்கு மாற்றாக பல்துலக்கி வயர்களை பயன்படுத்தலாம்.

அடிக்கடி பற்களைக் குத்தும்போது, பல் ஈறுகளில் குச்சி பட்டு புண்ணை ஏற்படுத்தும். இது வாய் நாற்றத்தை அதிகரிக்கும்.   

செயற்கைப் பல்லைப் பயன்படுத்துபவர்கள் இரவில் அதைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது.   

ஒவ்வொரு முறை உணவு உண்டதும் செயற்கைப் பல்லைக் கழற்றி, அதற்கென உள்ள பல்துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.  

பல், ஈறுகளின் நலனைக் கெடுக்கும் புகையிலை, வெற்றிலை, பாக்கு, பான்மசாலா, சிகரெட், மது கூடாது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...