பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் - ஒரு விசிட்

சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், காஞ்சி மகாஸ்வாமியின் அனுக்கிரகத்துடன், முக்கூர் ஸ்ரீநிவாச வரதாச்சாரியாரின் முயற்சியில் கட்டப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் ஸ்தபதியிடம் மகாலட்சுமி விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அஷ்டலட்சுமிகளுக்கும் காஞ்சி மகாஸ்வாமி ஒப்புதலுடன் கோயில் கட்டும் பணி தொடங்கியது.

மகாஸ்வாமியின் ஆலோசனைப்படி, அஷ்டாங்க விமானம் கட்ட ஏற்பாடானது. மகாலட்சுமியைச் சுற்றி 8 லட்சுமிகளும் இருக்க வேண்டும் என்று முடிவானது.

1974-ல் தொடங்கப்பட்ட திருப்பணிகள், 1976-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ஸ்ரீமன்நாராயணனின் விக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டு, 5-4-1976 மகா சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.

வங்கக் கடல் அமைந்திருக்கும் கிழக்கு திசை நோக்கிய அஷ்டலட்சுமி கோயில், அஷ்டாங்க விமானத்துடன் மன்னர்களின் கலைத்திறனை பறைசாற்றும் விதமாக காட்சியளிக்கிறது.

24 கால்  மண்டபத்தைத் தாண்டி படியேறினால் ஸ்ரீ மகாலட்சுமியுடன் உறையும் மஹாவிஷ்ணுவின் கருவறையை அடையலாம்.  

பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் 2 கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற 2 கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன், 7 அடி 3 அங்குல உயரத்துடன் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார்.

கருவறையை சுற்றி வரும்போது, தெற்கு நோக்கிய ஆதிலட்சுமி, மேற்கு நோக்கிய தானிய லட்சுமி, வடக்கு நோக்கிய தைரியலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம்.  

கிழக்கு நோக்கிய கஜலட்சுமி, தெற்கு நோக்கிய சந்தானலட்சுமி, மேற்கு நோக்கிய விஜயலட்சுமி, வடக்கு நோக்கிய வித்யாலட்சுமி, கிழக்கு நோக்கிய தனலட்சுமியை தரிசிக்கலாம். 

இரண்டம் தளத்தில் தென்கிழக்கு திசையில் லட்சுமி கல்யாணக் காட்சி, தென்மேற்கில் ஸ்ரீவைகுண்டக் காட்சி, வடகிழக்கில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியை தரிசிக்கலாம். 

மகாலட்சுமி தாயார் வில்வ மரத்தில் வாசம் செய்வதால், இந்த மரமே இங்கு தலமரமாக போற்றப்பட்டு வளர்க்கப்படுகிறது.   

காலை 6.30 முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையும் இக்கோயில் திறந்திருக்கும். | தகவல்கள்: மகேந்திரவாடி உமாசங்கரன்

Web Stories

மேலும் படிக்க...