ஆஸ்கர் போட்டிக்கான இந்திய ரேஸில் இருந்த படங்கள்!
2025 ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘லாபத்தா லேடீஸ்’ தேர்வானது. இந்த ரேஸில் இறுதி வரை வந்த 29 படங்களில் கவனம் ஈர்த்தவை...
அனிமல் - சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். ரூ.900 கோடி வசூலை அள்ளியது இந்தப் படம்.
ஹனுமன் - தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கினார். ரூ.40 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் ரூ.300+ வசூலை ஈட்டியது.
கல்கி ஏடி 2898 - பிரபாஸின் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல் உள்ளிட்ட பலர் நடித்தனர். ரூ.1000 கோடி வசூலை ஈட்டியது.
கில் - இந்திப் படமான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்ஷனிலும் அதிரடியிலும் மிரட்டியது.
ஆட்டம் - பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து அழுத்தமாக பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
உள்ளொழுக்கு - பார்வதி - ஊர்வசி இணைந்து மிரட்டிய இந்த மலையாள படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
மகாராஜா - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரூ.100 கோடி வசூலை அள்ளியது.
கொட்டுக்காளி - சூரி, அன்னாபென் நடிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இப்படம் சாதிய, ஆணாதிக்க, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கேள்வி எழுப்பியது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்தப் படம் வெகுஜன சினிமாவாக கவர்ந்தது.
ஆடுஜீவிதம் - உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் பிருத்விராஜின் நடிப்பு பாராட்டப்பட்டது.
வாழை - உண்மை சம்பவத்தை வெகுஜன சினிமா அம்சங்களுடன் திரைக்கதையாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தங்கலான் - பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த இந்தப் படம் மேஜிக்கல் ரியலிசம் மூலம் புதிய திரைக்கதையுக்தியால் ரசிகர்களை கவர்ந்தது.
ஜமா - கூத்துக்கலைஞர்களின் வாழ்வியலை பேசிய இப்படம் பரவலான கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது.
ஆல் வி இமேஜின் அஸ் லைட் - கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற மலையாளப் படம் கேரளாவில் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்வதந்திரய வீர் சாவர்க்கர் - ரன்தீப் ஹுடா இயக்கி நடித்துள்ள இந்தப் படம் வரவேற்பை பெறவில்லை என அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.