தேவாங்கு: இயல்புகள் + சில தகவல்கள்

தேவாங்கு இரவு நேரத்தில் மட்டுமே இரை தேடி வெளியே வரும். மிகவும் பயந்த சுபாவம் கொண்ட விலங்கு. 

பார்ப்போருக்கு பரிதாபத்தை வரவழைக்கும் தோற்றத்தை கொண்டுள்ளது தேவாங்கு. பாலூட்டி வகையை சேர்ந்தது.

தேவாங்குகள் இரவு நேரங்களில்தான் வெளியில் வரும். மரங்களில் வாழக்கூடியது. வாழ்நாளில் பெரும் பகுதியை மரங்களில் கழிக்கின்றன. 

விவசாய பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு விவசாயிகளின் நண்பனாகவும் திகழ்கிறது.

வனப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தேவாங்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

எந்த திசைநோக்கி தேவாங்கு நகர்ந்து சென்றாலும் அது வடக்கு திசையை நோக்கித்தான் அமரும். 

பண்டைய காலத்தில் கடல் வணிகம் செய்வோர், கடலில் திசை மாறி செல்லாதிருக்க, தேவாங்கை உடன் அழைத்துச் செல்வார்களாம். 

தேவாங்கு அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அறிவித்துள்ளது. 

திண்டுக்கல், கரூர் மாவட்ட எல்லையில் அமையவுள்ளது இந்திய நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயம்.

திண்டுக்கல் - கரூர்     தேவாங்கு சரணாலயத்துக்கான உள்கட்டமைப்பு பணிகள் ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தேவாங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கரூர் மாவட்ட வனப்பகுதியில் 6,000 தேவாங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

தேவாங்கு சரணாலயத்தின் திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் 5,000 தேவாங்குகள் உள்ளன.

Web Stories

மேலும் படிக்க...