புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் - ஒரு விசிட்

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரி நகரத்தில் அமைந்த ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

புரி தலத்தில் ஸ்ரீ ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் விக்கிரகங்கள் மரச் சிற்பங்களால் ஆனவை.  

‘உத்கலம்’ என அழைக்கப்படும் ஒடிசாவில் அமைந்துள்ளது புரி நகரம். சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது கோயில்.  

665 அடி நீளமும், 640 அடி அகலமும் கொண்டது கோயில். பிரகாரச் சுவர் 20 அடி முதல் 24 அடி உயரம். 4 திசைகளிலும் 4 மகா துவாரங்கள் உள்ளன.

ஸ்ரீஜெகந்நாதர் கோயிலில், பிரதான மூர்த்திகள், 4 அடி உயரம் 16 அடி நீளமுள்ள ஒரு கல் மேடையின் (ரத்னவதி) மீது ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.  

மேடையில் மேல் வடக்கில் 6 அடி உயர சுதர்சன சக்கரத்துக்கு தெற்குப் பகுதியில் ஸ்ரீ ஜெகந்நாதர், சுபத்திரை, பலபத்ரனின் மூர்த்திகள் நின்ற நிலையில்!

ஜெகந்நாதருக்கு ஒருபுறம் லட்சுமி தேவியும், மறுபுறம் சத்தியபாமாவும் அருள்பாலிக்கின்றனர்.

மூர்த்திகளுக்கு ஆரதி அலங்காரம், அவகாசர் அலங்காரம், ப்ரஹார அலங்காரம், தாமோதர அலங்காரம் செய்யப்படுகின்றன.  

ஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை. பறவைகள் கோயிலின் மேல் பறப்பதில்லை. கோபுரத்தின் மீது எந்தப் பறவையும் அமர்வதில்லை.

கோபுரத்தின் மீதுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒன்றுபோல காட்சியளிக்கும்.     

கோயிலில் கடலலை சப்தம் கேட்பதில்லை. ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி தின ரதோற்சவம் பிரசித்தி பெற்றது. | தகவல்கள்: கே.சுந்தரராமன்  

Web Stories

மேலும் படிக்க...