சோகோட்ரா... உலகின் அதிசயத் தீவு!

உலகில் எத்தனையோ அதிசயங்களும் விநோதங்களும் மர்மங்களும் ஏராளமாக இருக்கின்றன. இப்படி விநோதங்களும் மர்மங்களும் கொண்ட ஒரு தீவு உலகில் இருக்கிறது.

தீவில் எங்கு பார்த்தாலும் அதிசயம் கொட்டி கிடக்கிறது. காணப்படும் பொருட்கள் எல்லாம் வேறு எங்கும் காணப்படாதவை. இப்படியான ஒரு அதிசயத் தீவின் பெயர் சோகோட்ரா.

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கடற்கரை கொம்பு முனைக்கும் அரேபியத் தீபகற்பத்திற்கும் தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தச் சிறு தீவுக் கூட்டம். 

70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்த இத்தீவு, நாளடைவில் ஏற்பட்ட புவியியல் மாற்றம் காரணமாகத் தனித் தீவுக் கூட்டமானது.

கரடுமுரடான பாலைவனம் போல் உள்ளது இந்தத் தீவு. திட்டு திட்டாகக் காடு, பிரம்மாண்டப் பாறைகள், வித்தியாசமான மரங்கள், அழகான கடற்கரை, குகைகளுடன்!  

கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் மலைகள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள், பல்லுயிர் தாவரங்களை உலகில் வேறு எங்குமே காண முடியாது.   

வேற்றுக் கிரகச் சூழல் நிலவும் பகுதி இது என விஞ்ஞானிகள் அழைக்கும் இந்தச் சோகோட்ரா தீவு, ஏமன் நாட்டின் ஆளுகையின் கீழ் உள்ளது.

சோகோட்ரா தீவில் மரங்களின் கீழ்ப்பகுதி குண்டாகவும் மேல்பகுதி சூம்பிப் போன விரல்கள் போலவும் காணப்படும் மரங்களின் கிளைகள் என எல்லாமே இங்கு வித்தியாசம்தான்.

டிராகன் மரங்கள் நிறைய உள்ளன. மரத்தில் எங்கேயாவது கீறல் ஏற்பட்டல் சிவப்பு வண்ணத்தில் திரவம் வரும். இந்த மரங்களுக்கு டிராகன் மரம் எனப் பெயர்.

ஏராளமான புதிர்கள் நிறைந்திருக்கும் சோகோட்ரா தீவினை 2008-ம் ஆண்டில் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.  

சோகோட்ரா தீவில் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். இங்கு 40,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். | தொகுப்பு: டி.கார்த்திக்

Web Stories

மேலும் படிக்க...