மனநலன் காக்கும் உணவு எது? - ஆய்வு தரும் டிப்ஸ்
பழங்களையும் காய்கறிகளையும் சீரான முறையில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மனநலனுக்கும் சிறந்தது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கூடுதலான அளவு பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்ப்பது மனநலனில் கூடுதலாக 8 நாட்கள் நடைப்பயிற்சி செய்த பலனை அளிப்பதாக சொல்கிறது ஆய்வு முடிவு.
தினசரி குறைவான பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவோரை அதிகம் சாப்பிடுபவர்களின் மனநலன் செறிவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வால்நட் பருப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் 26% குறைவாக இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலை. ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எந்தப் பருப்பையும் சாப்பிடாதோருடன் ஒப்பிடும்போது பாதாம் போன்ற மற்ற பருப்புகளைச் சாப்பிட்டவர்களிடம் மனச்சோர்வு அறிகுறிகள் 8% குறைவாக இருக்கின்றன.
‘நியூட்ரியன்ட்ஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, வால்நட் பருப்புகள் உட்கொள்வதால் ஆற்றல், கவனத் திறன்கள் அதிகரிப்பதை உறுதிபடுத்தி இருக்கிறது.
இதயம், அறிவாற்றல் ஆரோக்கியத்துக்கும் வால்நட் பருப்புகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி முன்பு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, மனச்சோர்வு அறிகுறிகளையும் வால்நட் பருப்புகள் குறைப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. | தொகுப்பு: யாழினி