‘சமூகப் பதற்ற பாதிப்பு’ வருவது ஏன்?
நல்ல உடை போன்றவை வாங்கக் கூட நமக்குப் பிடித்தபடி வாங்காமல் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்தே பெரிதும் கவலைப்படுகிறோம்.
குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில்கூட அவர்களது திறமை, விருப்பத்தைவிடச் சமூக அங்கீகரிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சமூக அங்கீகரிப்பின் விளைவு நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்காகப் பல செயல்களைச் செய்யத் தொடங்குகிறோம்.
நமது செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சமூகம் எல்லாவிதமாகவும் பேசும். அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது எந்த ஆக்கப்பூர்வ விளைவையும் தராது.
பிறர் நம் மீது கொண்டுள்ள மதிப்பு குறித்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது நம்மைக் குறைவாக மதிப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கிறது.
தாழ்வு மனப்பான்மையால் பிறர் முன் பதற்றம் ஏற்படுகிறது. சாதாரணப் போட்டிகளில் கோலி மாதிரி விளையாடிவிட்டு, முக்கியப் போட்டிகளில் கோழி ஆகிறோம்.
பொது இடங்களுக்குச் செல்ல அஞ்சுவது, பொதுக் கூட்டங்களில் பேச அஞ்சுவது, இதயம் படபடப்பது ‘சமூகப் பதற்ற பாதிப்பு’ என அழைக்கப்படுகிறது.
நம்மைப் பற்றித் தாழ்வாக நினைக்காமல் இருப்பது, பிறர் கருத்துக்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது இரண்டும்தான் இதற்கான தீர்வுகள்.
சமூகத்துடன் இணைவது அவசியம்தான். அதற்காக அளவுக்கு அதிகமாகச் சமூகத்தை நினைப்பது பாதகம் தரும். சமநிலையே நலம் தரும். | தகவல்: டாக்டர் ஜி.ராமானுஜன்