மூலநோய் - தடுப்பது எப்படி?

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.

காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம்.

தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும்.

தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். 

உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். | தகவல்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...