எம்.எஸ். சுப்புலட்சுமி தோற்றத்தில் வித்யா பாலன் எப்படி?
மறைந்த பழம்பெறும் பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108-வது பிறந்த நாளையொட்டி, அவரது பாரம்பரிய பாணியை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் நடிகை வித்யா பாலன்.
’பாரத் ரத்னா’ விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு தான் செலுத்தும் மரியாதையாக இதைச் செய்திருக்கிறார் வித்யா பாலன்.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்த வித்யாபாலன், இம்முயற்சிக்கு ’ரீ-கிரியேஷன் ஆஃப் ஐகானிக் ஸ்டைல்ஸ்’ என்று தலைப்பிட்டுள்ளார்.
“எம்.எஸ்.சுப்புலட்சுமியை பார்த்துதான் நான் வளர்ந்தேன். என் அம்மா தினமும் காலையில் அவர் பாடிய சுப்ரபாதம் பாடலை வீட்டில் ஒலிக்க விடுவார்” என்று நெகிழ்கிறார் வித்யா பாலன்.
“என்னுடைய தினம் அவரது குரலில் தான் தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஓர் ஆன்மிக அனுபவம்” என்கிறார் வித்யா பாலன்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் இது. இந்த வழியில் அவருக்கு மரியாதை செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் வழிகாட்டுதலுடன், அவரின் ஐகானிக் புடவைகள், அணிகலன்கள் உடன் அழகியலை மறு உருவாக்கம் செய்துள்ளார் அனு.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இந்த ஐகானிக் புடவைகளை முத்து செட்டியார் மற்றும் நல்லி சின்னசாமி செட்டி ஆகியோர் உருவாக்கி கொடுத்துள்ளனர்.
"பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாணியை மீண்டும் உயிர்ப் பித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். வித்யாபாலன் இதற்கு சரியான தேர்வாக இருந்தார்” என்றார் ஆடை வடிவமைப்பாளர் அனு.