‘ஓணம்’ பின்புல புராணக் கதை தெரியுமா?

அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

மன்னன் மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டார். வீரமும் தீரமும் மிக்க அந்த மன்னர் ஈகையிலும் சிறந்து விளங்கினார்.   

மகாபலிக்கு ஏற்பட்ட ஆணவத்தையும், அவரது பக்தியின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த திருமால் எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.  

மூன்று உலகுக்கும் தானே முதல்வன் என்று ஆணவத்தோடு இருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் வாமன ரூபத்தில் வந்த திருமால் மூன்று அடி இடம் கேட்டார்.  

வாமன ரூபத்தில் இருந்த திருமாலிடம், “குள்ளத் தோற்றத்தில் மூன்றடி தானம்... தந்தேன்” என்றார் மகாபலி சக்கரவர்த்தி.  

விஸ்வரூபம் எடுத்த திருமால் தனது முதல் அடியில் மண்ணையும், இரண்டாவது அடியில் விண்ணையும் எடுத்து வைத்தார். 

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை பகவான் விஷ்ணு அடக்கிய சம்பவத்தை ஒட்டி ஓணம் திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதிகம்.

ஆண்டுதோறும் திருவோண நட்சத்திரத்தில் தன் நாட்டு மக்கள் வளமுடன் வாழ்வதைப் பார்வையிட திருமாலிடம் வரம் அருள வேண்டினார் மகாபலி.

மகாபலி ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் மக்களைக் காண வரும்போது, அவரை வரவேற்கவே அத்தப்பூ கோலமிட்டு மகிழ்கின்றனர். | தொகுப்பு: யுகன்

Web Stories

மேலும் படிக்க...