சின்ன சின்ன செலவு உஷார்... ஃப்ராங்க்ளின் 10 மந்திரங்கள்

அமெரிக்க உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அரசியல் தலைவர் - எழுத்தாளர் - அறிவியல் கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் உதிர்த்த 10 வெற்றி மொழிகள்...

“தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், சாதனை மற்றும் வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.”

“தயாராவதில் தோல்வி என்றால், நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.”

“நல்ல மதிப்பை பெறுவதற்கு பல நல்ல செயல்கள் தேவைப்படுகிறது; ஆனால் அதை இழப்பதற்கு ஒரே ஒரு மோசமான செயலே தேவைப்படுகிறது.”

“சின்ன சின்ன செலவுகளில் ஜாக்கிரதையாக இருங்கள்; ஒரு சிறிய கசிவு ஒரு பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும்.”

“அறிவுள்ளவர்களுக்கு ஆலோசனை தேவையில்லை, முட்டாள்கள் ஆலோசனையை கேட்கப் போவதில்லை.”

“சீக்கிரமாக படுக்கைக்கு செல்வதும், சீக்கிரமாக எழுவதுமே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், அறிவையும் உருவாக்கும்.”

“தீயப் பழக்கங்களை தகர்த்தெறிவதை விட தடுப்பதே எளிதானது.”

“சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.”

“விடாமுயற்சி என்பது அதிர்ஷ்டத்தின் தாயைப் போன்றது.”  

“சிறந்த சொல்லைவிட சிறந்த செயலே மேன்மையானது.”

Web Stories

மேலும் படிக்க...