ஓணம்: அத்தப்பூ கோலம் ஏன்?
கோலம் என்பதே தனிக் கலைதான். அதுவும் பூக்களாலே போடப்படும் அத்தப்பூ கோலத்தைப் போடுவதற்குப் பொறுமை அதிகம் வேண்டும்.
கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் ஓர் அங்கமாக உள்ள அத்தப்பூ கோலம் இன்று சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பெண்களால் ஆராதிக்கபடுகிறது.
அத்தப்பூ கோலத்துக்கு பின்னால் புராணக் கதை இருக்கிறது. அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே இதன் ஐதீகம்.
தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கவே விதவிதமான பூக்களில் அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் கேரளப் பெண்கள்.
கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பார்க்கப்படுகிறது.
மொத்தம் 10 நாட்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலமிடுவர்.
முதல் நாள் ஒரு வகை, இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள்.
அத்தப்பூ இடுவதற்காக தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை அதிகம் பயன்படுத்துவர். | தகவல்: ஈஸ்வரி