பல் சொத்தையா? - தீர்வுக் குறிப்புகள்
பல் சொத்தை தொடக்க நிலையில் உள்ளபோதே பல் மருத்துவர் மூலம் சொத்தையைச் சுத்தம் செய்து அடைத்து 5 முதல் 10 வருடங்கள் அந்தப் பல்லைக் காப்பாற்றலாம்.
பல் சொத்தைக்கு தேவைப்பட்டால் ‘வேர் சிகிச்சை’ செய்து 15 ஆண்டுகள் வரை வரை பல்லைக் காப்பாற்ற முடியும்.
ஒருவேளை சொத்தைப் பல் உடைந்திருந்தால், அந்தப் பல்லை எடுக்காமல் டென்டல் போஸ்ட் எனும் சிகிச்சை முறையைக் கொண்டு காப்பாற்றலாம்.
சொத்தைப் பல் சிகிச்சைக்குப் பின், பற்களை முறையாக ஸ்கேலிங், ஃப்ளாசிங் செய்து சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
இயற்கைப் பற்களை முற்றிலும் இழந்தவர்கள் உணவை மென்று சாப்பிடும் வழக்கத்தை இழக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நாம் மென்று சாப்பிடுவது குறையும்போது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறைவதால் மறதி நோய் (Dementia), அல்சீமர்ஸ் (Alzheimer’s) ஏற்படும் அபாயம் உண்டு.
ஆக, இயற்கைப் பற்களை இயன்ற வரையில் காப்பாற்றித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். | தகவல்: டாக்டர். ஆர்.வி.அபராஜிதா